வில்லுப்பாட்டு பிரேமாவின் அழகில் மயங்கி, கணவர் செய்த மோசமான காரியம்! அப்பாவி மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை! அதிர்ச்சி பின்னணி l!

வில்லுப்பாட்டு பிரேமாவின் அழகில் மயங்கி, கணவர் செய்த மோசமான காரியம்! அப்பாவி மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை! அதிர்ச்சி பின்னணி l!


husband-cheating-wife-for-illegal-love

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த, உறவுக்காரப் பெண்ணான ஜாய்சி என்பவருடன்  திருமணம் நடைபெற்றுள்ளது. ஜாய்சிக்கு அந்தளவிற்கு தமிழ் தெரியாது. ஆனாலும் நெல்லையில் சுப்புராஜ்க்கு சொந்தமாக வீடு, நிலம் இருந்ததால் ஜாய்சியின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்துகொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துள்ளனர்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேலை எதுவும் இல்லாமல் மாமியாரின் வீட்டில் சொகுசாக வாழ்ந்து வந்த சுப்புராஜ்க்கு  குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விடுவதும், அவர்களை அழைத்து வருவது மட்டும்தான் வேலை. இவ்வாறு அவர் பள்ளிக்கு சென்றுவந்த நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பிரேமா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரேமா வில்லுபாட்டு பாடும் பழக்கம் கொண்டவர்.மேலும் அதனை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவேற்றம் செய்தும் வந்துள்ளார். 

illegal affair

இதனைக்கண்ட சுப்புராஜ்க்கு அவரை பிடித்துபோக, அவரும் பிரேமாவுடன் சேர்ந்து வீடியோவை வெளியிட்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகி வந்தநிலையில்,  சுப்புராஜ் ஜாய்சி பெயரில் இருந்த சொத்தை பிரேமா பெயருக்கு மாற்றியுள்ளார். மேலும் ஜாய்சியும் தமிழ் தெரியாத நிலையில் கணவன் கையெழுத்து கேட்கும் இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிய அவர்கள் கன்னியாகுமரிக்கு சென்று ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த நிலையில் ஜாய்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் சுப்புராஜ் தனது மனைவியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அவரை தவறான தொழில் செய்பவர் என்று குறிப்பிட்டு போன் நம்பரை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஜாய்சி இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.