இந்தியா

அட.. இப்படியெல்லாமா நடக்கும்! வீட்டுப்பாடம் செய்யாத குழந்தை! கண்டித்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

வீட்டுப்பாடம் சரியாக படிக்காத குழந்தையை கண்டித்த மனைவி.! சரமாரியாக கத்தியால் குத்திய கணவர்.!

குழந்தை சரியாக பாடம் படிக்காததால் கண்டித்த மனைவியை அவரது கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் அவினாஷ் வர்பே. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. அவினாஷ் வர்பேயின் மனைவி பெயர் ஜெயஸ்ரீ. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு ஜெயஸ்ரீ தனது குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கற்றுக்கொடுத்துள்ளார். அப்போது, குழந்தை சரியாக பாடம் கற்காமல் இருந்ததால் தாய்  ஜெயஸ்ரீ குழந்தையை அடித்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த அவினாஷ் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவி ஜெயஸ்ரீயை அவினாஷ் வீட்டில் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அங்கு ஜெயஸ்ரீயின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வருவதற்கு முன்பே அவினாஷ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அவினாஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement