இந்தியா

கணவன் மனைவி இடையே ஏற்ப்பட்ட வாக்குவாதம்..! கோபமான தந்தையால் 14 மாச பிஞ்சு குழந்தைக்கு நிகழ்ந்த சோகம்..

Summary:

Husband and wife problem 14 matha kulanthaiku nigalntha sogam

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜம்ஷீத் என்பவர் பிழைப்பிற்காக தனது மனைவியுடன் நொய்டாவிலுள்ள காலனி ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 14 மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. ஜம்ஷீத் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஒரு நாள் வழக்கம் போல் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படவே மனைவி மீது கோபமான ஜம்ஷீத் பக்கத்தில் இருந்த 14 மாத பிஞ்சு குழந்தையை தூக்கி மனைவியின் மீது வீசியுள்ளார். அதில் குழந்தை கீழே விழுந்து காயம் ஏற்ப்பட்டுள்ளது.

உடனே குடும்பத்தினர் அந்த பிஞ்சு குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.இது தொடர்பாக குழந்தையின் தாய் அளித்த புகாரின் பெயரில், ஜம்ஷீத் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement