அடக்கொடுமையே!! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்... 4 நாட்களுக்குப் பின்பு சடலமாக மீட்பு..!
அடக்கொடுமையே!! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்... 4 நாட்களுக்குப் பின்பு சடலமாக மீட்பு..!

மத்திய பிரதேச மாநிலம் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் 5 வயது சிறுவன் கடந்த டிசம்பர் 6ம் தேதி தனது வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் சரியாக மூடாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.
இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் கடந்த 5 நாட்களாக சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் 5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சிறுவன் நேற்று மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.