இந்தியா

போதையின் உச்சம்.! 95 ஆயிரம், 52 ஆயிரம்..! பாட்டில் பாட்டிலாக மதுவாங்கிய குடிமகன்கள்.! கடை உரிமையாளருக்கு சிக்கல்.!

Summary:

Highest tasmac bill photos goes viral

கொரோனா காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக வரும் மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த 40 நாட்களுக்கும் மேல் மக்கள் கூடும் இடங்கள், கடைகள், டாஸ்மாக் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பின்போது மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதில் டாஸ்மாக் கடைகள் இயங்க அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் நேற்றுமுதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் ஒருவர் 95 ஆயிரத்து 347 ரூபாய்க்கும், மற்றொருவர் 52 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் மதுபாட்டில்களை வாங்கியுள்ளார். அவர்கள் மதுக்கடைகளுக்கு செலுத்திய ரசீது புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் ஒரே நபருக்கு அதிகப்படியான மதுபாட்டில்களை விற்பனை செய்ததிற்காக மதுக்கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.


Advertisement