பீகாரில் இடியுடன் கூடிய மழை.! கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு!

பீகாரில் இடியுடன் கூடிய மழை.! கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு!



heavy rain in bihar 93 people died

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் அதே நேரத்தில் பருவமழையும் தீவிரமடைய தொடங்கியுள்ளன. இதில் கடந்த சில தினங்களால பீகார் மாநிலத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், பீகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இடி மின்னலுடன் சேர்த்து அங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பேரிடர் மீட்புக் குழுவினர் அனைத்துப் பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்படுள்ளனர். 

இந்நிலையில் பீகாரில் இன்று இடியுடன் கூடிய பெய்த மழை காரணமாக 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அதிகபட்சம் 13 பேர் உயிர் இழந்தனர் என மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இந்த துயரத்தில் உயிரிழந்த 83 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். ஒரே நாளில் இடியுடன் கூடிய மழைக்கு 83 பேர் உயிரிழந்திருப்பது பீகார் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.