பார்க்கிங் தகராறில் 31 வயது ஐடி மேனேஜர் கார் ஏற்றிக்கொலை; பார்க்கிங் பட பாணியில் படுபயங்கர சம்பவம்.!haryana Gurugram 31 Year Old IT Manager Killed 

திரைப்படத்தை விட மிரளவைக்கும் வகையில் நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம், வாகன நிறுத்துமிடத்திற்கு கொலையும் நடக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், செக்டர் 49 பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் பரத்வாஜ். இவர் வசித்து வரும் குடியிருப்பில், வேறொரு வீட்டில் இருப்பவர் ரிஷப் ஜசுஜா (வயது 31). இவர்கள் இருவருக்கும் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக அவ்வப்போது கருத்து வேறுபாடு, வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது.

வாகன நிறுத்துமிடம் தொடர்பாக தகராறு

இந்நிலையில், சம்பவத்தன்று ரிஷப் வேலையை முடித்துவிட்டு வரும்போது, மனோஜின் வீட்டிற்கு வெளியே காரை நிறுத்தியுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அச்சமயம் ஆத்திரமடைந்த மனோஜ், தனது ஹூண்டாய் காரை வைத்து இளைஞர் ரிஷப் மீது ஏற்றி இருக்கிறார். 

இதையும் படிங்க: காதலருடன் உல்லாசமாக இருந்த அத்தை; நேரில் பார்த்த 5 வயது சிறுமி கொடூர கொலை..!

கொலையில் முடிந்த வாக்குவாதம்

இந்த சம்பவத்தில் ரிஷப் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரிஷப்பின் சகோதரர் ரஞ்சக் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த ரிஷப் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். 

பார்க்கிங் படம் நினைவிருக்கா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.எஸ் பாஸ்கர், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படமும் இப்படியான ஒரு சம்பவத்தை தழுவி சுவாரஸ்யத்திற்காக கதை மாற்றம் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொத்து தகராறில் பயங்கரம்; 5 பேரை ஈவு இரக்கமின்றி கொன்று நாடகம்.. பதறவைக்கும் தகவல் உள்ளே.!