என்னால டார்ச்சல் தாங்க முடியல... வீட்டைக் கூட்டுவது, துடைப்பது, பாத்திரம் கழுவுவது எல்லாம் கணவன் தான்! ஆனாலும் கொடுமை படுத்தும் மனைவி... இன்ஸ்டாவில் வீடியோவால் வெளியான மரண வாக்குமூலம்..!!!



haryana-businessman-suicide-instagram-video-wife-harass

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான தொழிலதிபர் ஒருவர், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் வீடியோவில் உருக்கமான குற்றச்சாட்டு

தற்கொலைக்கு முன் வெளியிட்ட Instagram Videoவில், வீட்டை பெருக்குவது, துடைப்பது, பாத்திரங்கள் கழுவுவது உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் தானே செய்து வந்ததாகவும், இருந்தும் தனது மனைவி தொடர்ந்து அடித்து மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரே ஒருமுறை மட்டும் தான் உடலுறவு! மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகம்.... வசமாக கையில் சிக்கிய அந்த ஃபைல்! கணவனின் தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்ததும் நடந்த பயங்கரம்..!!!

மேலும், திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில், மனைவியின் குடும்பத்தினர் தன்னை பொய்யான வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டியதாகவும், அந்த அழுத்தம் மற்றும் மன உளைச்சலால் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்ததாகவும் வீடியோவில் கூறியுள்ளார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்துள்ளனர். தகவலின்படி, தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: ஒரு நொடி ஆத்திரத்தில் நொறுங்கிய குடும்பம்! தந்தையே எமனாக மாறிய அவலம்.....இறுதியில் நடந்த அதிர்ச்சி!!!