13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
உச்சகட்ட கொடூரம்..! வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; ஆட்டோ ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்.!

ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபத் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில், 24 வயது இளம்பெண் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் வேலையை முடித்துவிட்டு, 10 மணியளவில் தனது வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுகொண்டு இருந்துள்ளார்.
பெண்மணி பயணித்த ஆட்டோவில் வேறு யாரும் பயணிக்காத நிலையில், சிறிது தூரத்தில் 2 ஆண்கள் ஏறியுள்ளனர். பின் ஆட்டோ ஓட்டுநர் ஒதுக்குபுறமான இடத்திற்கு ஆட்டோவை கொண்டுசென்று, பெண்ணை கட்டாயப்படுத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
இறுதியாக ஆட்டோ ஓட்டுநர் பெண்ணிடம் அத்துமீற முயன்றபோது தப்பித்த பெண்மணி, சாலைக்கு சென்று அவ்வழியே வந்தவரிடம் உதவி கேட்டுள்ளார். அவர் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக விஷ்ணு, சனோஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவான ஆட்டோ ஓட்டுனருக்கு வலைவீசப்பட்டுள்ளது.