என் பொண்டாட்டி பேரு, உன் நாயிக்கு வைப்பயா?.. உயிருடன் பெண்ணை கொளுத்திய பயங்கரம்.!

குஜராத் மாநிலத்தை சார்ந்த நீடாபென் சர்வையா என்ற பெண்மணி, செல்லப்பிராணியாக நாயொன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய்க்கு சோனு என்று பெயரிட்டு அழைத்து வந்துள்ளார். நீடாபென் வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் பர்வத். இவர் தனது மனைவிக்கு அன்போடு சோனு என்று புனைபெயரிட்டு அழைப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.
நீடாபென் தனது நாயினை சோனு என அழைத்துவந்த நிலையில், பர்வத்துக்கு இந்த விஷயம் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எனது மனைவியை நான் அன்போடு சோனு என அழைக்கும் நிலையில், நாய்க்கு பெண்மணி அப்பெயரை வைத்துள்ளாரே என ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினத்தில் நீடாபென் தனது கணவர் வெளியே சென்ற பின்னர், இளைய மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, 5 பேரை அழைத்து வந்த பர்வத், நீடாபென் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்து அவரை தாக்கி இருக்கிறார். இவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க நீடாபென் சமையல் அறைக்குள் சென்றுள்ளார்.
பர்வத்துடன் வந்த நபரொருவர், சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து நீடாபென் மீது ஊற்றி தீவைத்து இருக்கிறார். தீயின் வெப்பம் தாங்க இயலாமல் பெண் அலறவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பெண்ணை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
இதற்குள்ளாக, வெளியே சென்றிருந்த நீடாபென் கணவரும் வீட்டிற்கு திரும்ப, அவர் தான் அணிந்திருந்த கோட்டை கழற்றி தீயை அணைத்து இருக்கிறார். நீடாபென் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், ஏற்கனவே இருவீட்டாருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பது தொடர்பான தகராறு இருந்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.