இன்னும் ஒரு நொடி லேட்டாட்டியிருந்தாலும் உயிரே போயிருக்கும்!! ரயில்வே ட்ராக்கில் மாட்டிக்கொண்ட ஸ்கூட்டர்.. வைரல் வீடியோ..

இன்னும் ஒரு நொடி லேட்டாட்டியிருந்தாலும் உயிரே போயிருக்கும்!! ரயில்வே ட்ராக்கில் மாட்டிக்கொண்ட ஸ்கூட்டர்.. வைரல் வீடியோ..


Gujarat scooter stuck in railway track viral video

குஜராத்தில் தனது ஸ்கூட்டருடன் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட இளைஞர் கடைசி நொடியில் உயிர் தப்பிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் சந்த்யா பாலத்தின்  அருகே இளைஞர் ஒருவர் தனது ஸ்கூட்டரை வைத்து ரயில்வே தண்டவாளத்தில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது ஸ்கூட்டர் ரயில்வே தண்டவாளத்தில் மாட்டிகொண்டநிலையில் அப்போது அந்த வழியாக ரயில் ஒன்று வந்துள்ளது.

ரயில் வருவதை பார்த்து தனது ஸ்கூட்டரை அந்த இளைஞர் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. இறுதியில் தனது கைகளை காட்டி ரயிலை நிறுத்தும்படி அந்த இளைஞர் ரயிலுக்கு சிக்னல் கொடுக்கிறார். ஆனால் ரயில் நிற்காமல் வந்துகொண்டிருக்க, கடைசியில் அந்த இளைஞர் சில வினாடிகளில் அங்கிருந்து தப்பித்துள்ளார்.

ரயில் ஸ்கூட்டரில் மோதி சில தூரம் இழுத்துச்சென்று பின் நிற்கிறது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.