அரசியல் இந்தியா

650 கோடி ரூபாய் மின் கட்டணம் தள்ளுபடி! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

Summary:

gujarat cm waived electricity bill of farmers

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி குஜராத் மாநில விவசாயிகளின் நலன் கருதி அவர்களின் மின் கட்டணமான ரூ.650 கோடியை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் கமல் நாத், பூபேஷ் பாஹல் முதலமைமைச்சர்களாக பதவியேற்றவுடன் விவசாயக்  கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "ஆட்சியில் இருக்கும் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்த அரசானது வசதிபடைத்த முதலாளிகளைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் மோடி அரசாங்கத்தை விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்படி வற்புறுத்திக்கொண்டே இருக்கும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை மோடியை தூங்க விட மாட்டேன்" என பேசியுள்ளார்.

vijay rupani க்கான பட முடிவு

இந்நிலையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, குஜராத் மாநில விவசாயிகளின் நலன் கருதி அவர்களின் மின் கட்டணமான ரூ.650 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

இதன் மூலம் கிராமப்புறத்தில் உள்ள சுமார் ஆறு லட்சம் விவசாயிகள் பயன் அடைவர். மின்சாரம் மசோதா மூலம் மின் கட்டணம் செலுத்தும் பயனாளிகள் மின்சார கட்டணத்திலிருந்து ரூ.500 திருப்பி தரப்படும் என்றும் அவர் கூறினார்.


Advertisement