அட என்ன ஒரு ஆட்டம்... நாகினியாக மாறி பேரனுக்கு சரிக்கு சரியாக குத்தாட்டம் போட்ட மூதாட்டி... வைரலாகும் வீடியோ!!

அட என்ன ஒரு ஆட்டம்... நாகினியாக மாறி பேரனுக்கு சரிக்கு சரியாக குத்தாட்டம் போட்ட மூதாட்டி... வைரலாகும் வீடியோ!!


Grandma's nagini dance video viral

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது விசித்திரமான வீடியோகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது மூதாட்டியின் குத்தாட்ட வீடியோ டிரெண்டாகி வருகிறது.

கல்யாண நிகழ்வு ஒன்றில் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் தனது பேரனுக்கு சரிக்கு சரியாக நாகினி நடனம் ஆடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அந்த மூதாட்டி ஆடும் நடன வீடியோ தான் இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

சுமார் 4 நிமிடங்கள் பேரனுக்கு இணையாக அந்த வயதான பாட்டி பாம்பு போல நடனம் ஆடியுள்ளார். பாட்டியின் நடனத்தை காண கூட்டம் அலைமோதியது. இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து மக்கள் வேடிக்கையாக பார்த்து ரசித்து வருகின்றனர்.