துள்ளலாக குத்தாட்டம் போட்ட தாத்தா! கம்புடன் வந்த பாட்டி.! பின் நடந்ததை பார்த்தீர்களா!! ரசிக்கவைக்கும் வீடியோ!!

துள்ளலாக குத்தாட்டம் போட்ட தாத்தா! கம்புடன் வந்த பாட்டி.! பின் நடந்ததை பார்த்தீர்களா!! ரசிக்கவைக்கும் வீடியோ!!


Grandfa ran after seeing grandmother coming with stick

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி பெருமளவில் வைரலாகும். அவற்றில் சில நம்மை சிரிக்க வைக்கும், சில சிந்திக்கவைக்கும். மேலும் சில வீடியோக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும், அதிர்ச்சியிலும் மூழ்கடிக்கும்.  இவற்றில் பல வீடியோக்கள் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதனை மறக்கடித்து ரசித்து சிரிக்க வைக்கும்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில்  குழந்தைகள் மற்றும் முதியவர்களின் வீடியோக்கள்  சில வெளியாகி இணையத்தையே கலக்கி வருகின்றன. அதில் சில வீடியோக்களில் வயதானாலும் முதியவர் சிலர் குழந்தைத்தனம் மாறாமல் செய்யும் காரியங்கள் ரசிக்க வைக்கும்.அவ்வாறு தற்போதும் முதியவர்கள் தொடர்பான ஒரு வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது. இதை கண்டால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

அந்த வீடியோவில், திருமண விழாவில் திறந்த மைதானம் ஒன்றில் டிஜே இசைக்கு இளைஞர்கள் ஆட்டம் போட்டுள்ளனர். அப்பொழுது இளைஞர்களுடன் முதியவர் ஒருவர் தூளாக ஆட்டம் போட்டுள்ளார். அப்பொழுது அவரது மனைவி ஒரு கம்புடன் அவரை நோக்கி வருகிறார். பாட்டியை பார்த்ததுமே தாத்தா டென்ஷனாகி அங்கிருந்து ஓடிவிடுகிறார். இந்த வீடியோ வைரலாகி பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.