மாநில அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை! முதல்வர் அதிரடி!

மாநில அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை! முதல்வர் அதிரடி!



govt-embloyee-leave

சிக்கிம் மாநிலத்தில் புதிய முதல்வராக பதவியேற்ற பி.எஸ். கோலே, மாநில அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை என்று அறிவித்துள்ளார்

சிக்கிம் மாநிலத்தில் தற்போது அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை என்ற நிலைபாடு உள்ளது. இந்தநிலையில் இதனை 5 நாட்கள் என குறைக்கப்படும் என்ற தங்களது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்தார் கோலே. இவர் தற்பொழுது முதல்வராக பொறுப்பேற்றவுடன் இந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

Sikkim

இதன் முலம் அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். இதை அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் உடல் நலத்தைக் கவனிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இம்மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதல்வராக பிரேம்சிங் தமாங் என்று அழைக்கப்படும் பி.எஸ். கோலே நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதும் இந்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பல தரப்பில் இருந்தும் வரவேற்கின்றனர்.