கூகுள் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா? உலகம் முழுவதும் முடங்கியது கூகுள்.. பயனர்கள் அதிர்ச்சி.

கூகுள் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா? உலகம் முழுவதும் முடங்கியது கூகுள்.. பயனர்கள் அதிர்ச்சி.


Google services temporarily down

கூகுள் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் முதல் இடத்தில் இருக்கும் கூகுள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது. குறிப்பாக YouTube , Gmail , Google Drive என எண்ணற்ற சேவைகளை வழங்கி மக்களை தன்வசப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

உலகளவில் பலகோடி மக்களால் மிகவும் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்பட்டுவரும் கூகுள் நிறுவனத்தின் சேவைகள் தற்போது உலகளவில் தடைபட்டுள்ளது. குறிப்பாக YouTube , Gmail , Google Drive போன்ற சேவைகள் கடந்த சில நிமிடங்களாக தடைபட்டுள்ளது.

கூகுள் பயணர்களால் எந்த ஒரு கூகுள் சேவையையும் பயன்படுத்த முடியவில்லை. Gmail இணையதளத்தில் உள்ளே நுழைய முயற்சித்தால், உங்கள் Gmail முகவரியை கண்டுபிடிக்கமுடியவில்லை என கூகுள் கூறுகிறது. இதனால் கூகுள் சேவைகளை பயன்படுத்த முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த தடை தற்காலிகமான தடையாக இருக்கும் என்பதால், இந்த தடை விரைவில்  சரி செய்யப்பட்டு கூகுள் நிறுவனத்தின் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.