குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! உங்கள் சம்பளம் உயரபோகுது!

குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! உங்கள் சம்பளம் உயரபோகுது!



Good news for low salaried employees

தற்போது இந்தியா முழுவதும் வெவேறு விதமாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளம் என்ற உத்திரவாதத்தை கொண்டுவர நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை ஒன்றை செய்ய உள்ளது.

சில இடங்களில் குறைந்தபட்ச ஊதியம் 20,000 ரூபாயும் சில இடங்களில் வெறும் 6000 ரூபாயும் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இதை முறைப்படுத்த நாடாளுமன்ற நிலைக்குழு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் இதற்கான பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக்குழு இன்று  மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த தீர்மானமானது அணைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை வழங்க வழிவகுக்கிறது.

Minimum saalry

மிகப்பெரிய நிறுவனம், தொண்டு நிறுவனம், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனம் என எதுவாக இருந்தாலும் ஊழியர்களுக்கு குறைந்தபடச்ச சம்பளத்தை வழங்க வேண்டும். அதேபோல 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்க கூடாது.

அதேபோல் அதிகம் அனுபவம் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டும், மெங்கும் அனுபவம் உள்ளவருக்கு, புதிதாக சேர்ந்தவருக்கு ஒரே சம்பளம் வழங்க கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை முறையாக செய்யாத நிறுவனங்களுக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு என்று மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். அதன்பின் அந்த அறிக்கை நாடாளுமன்ற நிலைக்குழு மூலம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்