புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை! இன்று ஒரு சவரன் தங்கம் எவ்வளவு தெரியுமா?

புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை! இன்று ஒரு சவரன் தங்கம் எவ்வளவு தெரியுமா?


Gold rate

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர்.

மேலும் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தற்போது தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலையும் உயர்ந்து வருகிறது. 

gold rate

அதன் படி இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து உச்சமாக ரூ.4,231க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு சவரனுக்கு ரூ.872 உயர்ந்து ரூ.33,848-க்கு விற்பனையாகிறது.