ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா தங்கியதால் 50 ஆடுகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம் நிலை!goat-sheperd-tested-corono-positive-goats-quarantined

கர்நாடகாவில் சுமார் 50 ஆடுகளை மேய்த்து வந்த நபருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால் அவர் வளர்த்த ஆடுகளை கிராம மக்கள் அரசு அதிகாரிகள் உதவியுடன் தனிமைப்படுத்தியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் தமுக்குரு மாவட்டம் கொடிகெரே என்னும் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சுமார் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

சில நாட்களாகவே அந்த நபர் வளர்த்த ஆடுகளில் ஒரு சிலவற்றிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அந்த கிராம மக்கள் இந்த தகவலினை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

corono

பின்னர் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஆடுகளை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவர்கள் சில ஆடுகளுக்கு வைரல் காய்ச்சல் வந்துள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் ஆடுகளின் மாதிரிகளை போபாலில் இருக்கும் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி எந்த ஆடுகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என கூறியுள்ளனர். இருப்பினும் அந்த ஆடுகளை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.