பால் வாங்கச் சென்று, வெகு நேரமாகியும் வீடு திரும்பாத சிறுமி! தேடிச்சென்ற பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

பால் வாங்கச் சென்று, வெகு நேரமாகியும் வீடு திரும்பாத சிறுமி! தேடிச்சென்ற பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!


Girl sexually abused by 3 boys

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு 8 மணியளவில் சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு அருகேயுள்ள மளிகை கடைக்கு பால் வாங்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஷாகில் மற்றும்  தஃலீம் என்ற  இரு வாலிபர்கள் சிறுமியை ஆள் இல்லாத ஒதுக்குபுறமான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும், அவர்களுடன் மற்றொரு இளைஞனும் இணைந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமி மயக்கமடைந்த நிலையில் அவரை அப்படியே போட்டுவிட்டு அனைவரும் தப்பி சென்றுள்ளனர்.இந்நிலையில்  சிறுமியின் பெற்றோர்கள் வெகுநேரமாகியும் சிறுமியை காணவில்லை என பல பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர். அப்பொழுது சிறுமி காட்டுப்பகுதியில்  மயக்கத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

sexual abuse

பின்னர் அவர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டநிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.