இந்தியா

காருக்குள் இளம்பெண் பலாத்காரம்... நடுரோட்டில் வீசி சென்ற பயங்கரம்.. அதிரவைக்கும் துயரம்.!!

Summary:

காருக்குள் இளம்பெண் பலாத்காரம்... பெண்ணை காரில் இருந்து வீசி சென்ற பயங்கரம்.. அதிரவைக்கும் துயரம்.!!

வேலை கேட்டு சென்ற பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

டெல்லி மாதங்கிரில் பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வேலையில்லாமல் இருந்த நிலையில், வேலை தேடி பல இடங்களுக்கு சென்றுள்ளார். இருப்பினும் வேலை கிடைக்காததால் தனது குடும்ப கஷ்டத்தை அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் கூறி, வேலை ஏதும் இருந்தால் கூறுமாறு கேட்டுள்ளார். 

அப்போது அந்த பெண் ஒருவருடைய போன் நம்பரை கொடுத்து அவரிடம் தொடர்பு கொண்டால் வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட பெண் அந்த நம்பருக்கு போன் செய்த நிலையில், எதிர்முனையில் பேசிய ஒரு நபர் அந்தப் பெண்ணை ஒரு இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார். 

அத்துடன் அந்த பெண் அவர் சொன்ன இடத்திற்கு சென்றபோது, அவரும் அவருடன் மற்றொருவரும் காரில் வந்து தங்களுடன் அந்த பெண்ணை ஜனக்புரி  மேம்பாலம் அருகே கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்கு தெரியாமல் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்த நிலையில், அந்த பெண் அதனை குடித்து சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார்.

இதனையடுத்து அவர்கள் காரை ஓரம்கட்டி, ஒரு இடத்தில் நிறுத்தி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் அந்த பெண்ணை மயக்க நிலையிலேயே ஒரு இடத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

மயக்கம் தெளிந்தபிறகு  தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த பெண் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.


Advertisement