இந்தியா

காதலித்து உறவுகொண்டு ஏமாற்றிய வாலிபர்.! மேள, தாளத்துடன் சென்று ஊரைக்கூட்டிய காதலி.!

Summary:

மத்திய பிரதேச மாநிலம் கொரக்பூரைச் சேர்ந்த, சந்தீப் என்பவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ள

மத்திய பிரதேச மாநிலம் கொரக்பூரைச் சேர்ந்த, சந்தீப் என்பவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக சந்தீப்பின் அத்தை மகள் ஊருக்கு வருகையில், இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டுள்ளது.  இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சந்தீப் அத்தை மகளான சிறுமியுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்து கொண்டதாகக் கூறப்படுகிறது

இதனையடுத்து சந்தீப்பிற்கு ராணுவத்தில் வேலை கிடைத்தவுடன், அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க சந்தீப் வீட்டினர் மறுத்துள்ளனர். மேலும் வேறு ஒருவரை அவருக்கு திருமணம் செய்துவைக்கவும் குடும்பத்தினர் முயற்சி செய்து வந்துள்ளனர். இதனையறிந்த சிறுமி மற்றும் குடும்பத்தினர் மற்றும் வாத்திய குழுவுடன் அத்தை மகனான காதலனின் வீட்டிற்கு சென்று நூதன முறையில் திருமணம் செய்யக்கூறி போராட்டம் நடத்தினர். 

உறவினர்கள் முன்னிலையில், சந்தீப் தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தற்கொலை செய்வேன் என்றும் சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில், திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.


Advertisement