இந்தியா உலகம்

வீரநடைபோட்டு தாயகம் திரும்பிய விமானி அபிநந்தன் அருகிலேயே இருந்த அந்த பெண் யார் தெரியுமா?

Summary:

girl near in abinandan while return to india

இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்த பாகிஸ்தான் விமானப்படையை இந்திய விமானப்படையினா் துரத்தி விரட்டினர். மேலும் இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்திய போது எதிர்பாராதவிதமாக போா் விமானம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் பாகிஸ்தானில் தரையிரங்கிய அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

பின்னர் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் விமானி அபிநந்தனை பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று  நெருக்கடி கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அபிநந்தன் நேற்று பாகிஸ்தானின் லாகூா் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்டடு பின்னர் லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு காா் மூலம் அழைத்து வரப்பட்டாா். 

அப்போது அபிநந்தன் அருகிலேயே பெண் அதிகாரி ஒருவர் இருந்தார். மேலும் நேற்று இந்தியா வந்த அபிநந்தனின் அனைத்து புகைப்படங்களிலும்,அபிநந்தனுடன் சேர்ந்து அந்த பெண்ணும் வைரலானார்.

இந்நிலையில் அபிநந்தன் அருகிலேயே இருந்த அந்த பெண் டாக்டர். ஃபரிஹா புக்தி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இந்திய வெளியுறவு தொடர்பான விவகாரங்களை கையாளும் பிரிவில் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நேற்று அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க அவர் வாகா எல்லைக்கு வந்துள்ளார்.


Advertisement