காதலித்து ஏமாற்றிய காதலன்.! அன்பாக பேசி வரவழைத்து காதலி செய்த செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!
காதலித்து ஏமாற்றிய காதலன்.! அன்பாக பேசி வரவழைத்து காதலி செய்த செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!

தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த நபரை காதலி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுபவர் சோனம். இவரும், அதே மருத்துவமனையின் ஆய்வகத்தில் உதவியாளராக பணியாற்றும் தேவேந்திரா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஆனால், சமீபத்தில் தேவேந்திரா தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாக சோனமிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சோனம், தன்னை காதலித்த தேவேந்திரா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என முடிவெடுத்து காதலனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்தநிலையில், தேவேந்திராவிடம் ஒருமுறை தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டுள்ளார். காதலி சமாதானம் ஆகிவிடுவாள் என்ற எண்ணத்தில் தேவேந்திராவும் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, தன்னை ஏமாற்றியதால் ஆத்திரத்தில் இருந்த சோனம், தேவேந்திரா வந்த உடனே அவர் மீது ஆசிடை ஊற்றி கொலை செய்துள்ளார். இதனையடுத்து சோனத்தை போலீசார் கைது செய்தனர்.