ஆத்தாடி.... சிலிண்டர் வாங்குவோருக்கு அடுத்த ஷாக்..! பேரதிர்ச்சியில் மக்கள்.!

ஆத்தாடி.... சிலிண்டர் வாங்குவோருக்கு அடுத்த ஷாக்..! பேரதிர்ச்சியில் மக்கள்.!


gas cylinder deposit price increased

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை 52 சதவிகிதம் உயர்த்தி எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வருகிற நிலையில், தற்போது சிலிண்டர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை 750 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது

14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரைப் பெறுவதற்கு டெபாசிட் தொகை 1450 ரூபாய் என்று இருந்த நிலையில், இனி 2200 ரூபாய் செலுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதே போன்று இரு சிலிண்டர்களுக்கான இணைப்பை பெற 4400 ரூபாய் செலுத்த வேண்டும்.

5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகையும், 800 ரூபாயில் இருந்து 1150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் ரெகுலேட்டரின் விலையும் 150 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.