இந்தியா

ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் வைத்த வாலிபர்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Summary:

Gas cylinder bike at railway track man arrested

சமூக வலைத்தளங்கள் மீதான தீராத மோகத்தால் சிலர் அதுக்கு அடிமைகளாக மாறி வருகின்றனர். முகநூல், டிவிட்டர், டிக் டாக், யுடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் பல்வேறு நேரங்களில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் பல நேரங்களில் அதுவே பெரும் ஆபத்தையும் ஏற்படுத்துகிறது.

லைக்ஸ் வரவில்லை, கமெண்ட்ஸ் வரவில்லை என எத்தனையோ பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் கூட நாம் கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் தனது யுடியூப் சேனலுக்கு அதிக பார்வையாளர்களை வர வைக்க வித்தியாசமான முயற்சி செய்து தற்போது போலீசிடம் வசமாக சிக்கியுள்ளார் ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ரயில்வே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், பட்டாசு, சைக்கிள் செயின், பைக் போன்றவற்றை வைத்து வீடியோ எடுத்து அதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். குறிப்பிட்ட வீடியோ வைரலானதை அடுத்து அவர் தற்போது ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Advertisement