இந்தியா

பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்து விழுந்து வெடித்ததால் விபத்து: 4 பேர் பரிதாப பலி..!

Summary:

பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்து விழுந்து வெடித்ததால் விபத்து: 4 பேர் பரிதாப பலி..!

ஒடிசாவில் பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்து விழுந்து வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாரதீப் நகரில் இருந்து நயாகார் நோக்கி சில்லறை விற்பனையாளர்களுக்கு வினியோகம் செய்ய பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி கொண்டு இரண்டு லாரிகள் புறப்பட்டு சென்று கொண்டிருந்தன.

இந்த நிலையில், நயாகார் பகுதியை நெருங்கும் போது அதிகாலை சுமார் 2 மணியளவில் ஆற்றுப்பாலத்தை கடந்து கொண்டிருந்தன. அப்போது முன்னால் சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  குஸ்மி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதனை தொடர்ந்து மற்றொரு லாரியில் இருந்த நபர் ஒருவர் முதல் லாரியில் இருந்தவர்களை மீட்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளார். இந்த நேரத்தில்  திடீரென ஆற்றில் விழுந்த லாரி வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் பலத்த காயமடைந்து உள்ளார்.

காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும்  அவர் இன்னும் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த  காவல்துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 


Advertisement