இந்தியா

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது.? வெளியான புதிய தகவல்..

Summary:

Former-President-Pranab-Mukherjees-health-continues

முன்னாள் ஜனாதிபதியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான பிரணாப் முகர்ஜி கடந்த 9- ஆம் தேதி உடல்நல கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் பிரணாப்பின் மூளையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இதனையடுத்து அவரது மூளையில் இருந்த ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.மருத்துவமனையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், வென்டிலேட்டர் ஆதரவில்தான் தொடர்ந்து இருப்பதாகவும் கூறியுள்ள டாக்டர்கள், எனினும் பிரணாப் முகர்ஜியின் முக்கிய உறுப்புகளின் இயக்கம் மற்றும் சிகிச்சை செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.


Advertisement