காரின் டயர் வெடித்து விபத்து.! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த முன்னாள் அமைச்சர்.!

காரின் டயர் வெடித்து விபத்து.! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த முன்னாள் அமைச்சர்.!


former-minister-car-tyre-bursted

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் அமல்நேரில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலைய கட்டிட திறப்புவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கலந்துகொண்டு காவல் நிலைய கட்டிடத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரியும், பா.ஜனதாவில் இருந்து விலகி சமீபத்தில் தேசியவாத காங்கிரசில் சேர்ந்தவருமான ஏக்நாத் கட்சேயும் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சி ,முடிந்த பிறகு காரில் புறப்பட்டுச்சென்ற முன்னாள் அமைச்சர் ஏக்நாத், ஜல்காவ் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காரின்  டயர் வெடித்து சிதறியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

car tyre burst

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட காரின் ஓட்டுநர், காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார், இதனால் அங்கு ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஓடிக்கொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.