அரசியல் தமிழகம் இந்தியா

சீன அதிபருக்கு தயாராகும் தமிழ் பாரம்பரிய உணவுகள் என்ன தெரியுமா? பிரமிக்கவைக்கும் ஏற்பாடுகள்!

Summary:

food for china president


இரண்டு நாட்கள் சுற்று பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகம் வந்துள்ளார். பாரத பிரதமர் மோடி அவர்களும் வந்துள்ளார். சீன அதிபர் சென்னை வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்திற்கு வந்துள்ளார். அங்கு பலத்த பாதுகாப்பும், கடற்கரை கோவில் அருகே கலைநிகழ்ச்சிகளுக்கு பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மாமல்லபுரம் வந்தடைந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடி அங்கு இருக்கும் கலை ஓவியங்கள் போன்றவைகள் குறித்து சீன அதிபருக்கு விளக்கம் கொடுத்தார்.

இதனையடுத்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கவுள்ளார். அந்த விடுதியில் சீன அதிபருக்கு 28 வகையான உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு மதிய உணவிற்கு வெங்காயம், இறைச்சியோடு சமைக்கப்பட்ட சாதம், முட்டைகோஸ், காய்கறி சாலட், பயிறு வகைகள், சூப் வகைகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சாம்பார் சாதம், பிரியாணி, பிரிஞ்சி சாதம், பட்டர் நான், சப்பாத்தி, ரொட்டி, புலாவ், போன்ற இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகளும் சீன அதிபருக்கு பரிமாறப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. காலை உணவாக இட்லி, சாம்பார், தோசை, சட்னி, வெண்பொங்கல், பூரி, இடியாப்பம், வடைகறி போன்ற தமிழக பாரம்பரிய உணவு வகைகளும் சீன அதிபருக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

விருந்தோம்பலுக்கு பெயர்போன தமிழ்நாட்டிற்கு வருகைதந்த சீன அதிருபருக்கு 28 வகையான உணவு வகைகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement