தனியாக இருந்த பெண்ணிடம் உணவு டெலிவரி கொடுக்க வந்த ஊழியர் செய்த செயல்.!Food delivery person harassment to girl in Bangalore

பெங்களூரு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாப்பிடுவதற்காக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதன்படி உணவு விற்பனை ஊழியர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து உணவு கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் கழிவறையை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் வீட்டுக்குள் வந்து அந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீர் அப்போது தண்ணீர் எடுக்க சமையல் அறைக்குள் சென்றபோது பின் தொடர்ந்து வந்த உணவு டெலிவரி ஊழியர், பெண்ணின் கையைப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

karnataka

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அந்த உணவு டெலிவரி ஊழியர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் எச்.ஏ.எல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த புளித்தார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் கலபுராகி மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான ஆகாஷ் என்று நபர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர்.