இந்தியா

பசியில் இருந்த மீன்களுக்கு சாப்பாடு கொடுத்து மகிழ்ந்த வாத்து! இணையவாசிகளை அதிகம் கவர்ந்த வீடியோ!

Summary:

Fish dock

பசியால் அங்கும், இங்கும் அழைந்து திரியும் மீன்களுக்கு வாத்து உணவளிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பர்வின் கஸ்வான் என்ற இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் அதில் இதை விட நட்பு சிறந்த எடுத்துக்காட்டு வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த மீன்கள் அனைத்தும் ஒரு நல்ல நண்பனை பெற்றுவிட்டது என்றும் பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் பசியில் இருக்கும் மீன்களுக்கு வாத்து ஒன்று மீனை வாரி வாரி வழங்குகிறது. அதனை உண்ணுவதற்கு மீன்கள் கூட்டமாக வரும் காட்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 

 

 

 


Advertisement