இந்தியா காதல் – உறவுகள்

செம ஜாலியாக இரண்டாவது திருமணம் செய்த நபர்! மணமேடையிலேயே முதல் மனைவி செய்த காரியத்தை பார்த்தீர்களா!

Summary:

first wife atacked husband for doing second marriage

உத்தர பிரதேசம் மாநிலம் சாமிலி மாவட்டத்தில் வசித்து வருபவர் பங்கஜ் குமார். 30  வயது நிறைந்த இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  மஞ்சுவுக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய பங்கஜ் குமார் முடிவு செய்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளார்.  

இதனை தொடர்ந்து திட்சாரி என்ற கிராமத்தில் பங்கஜ் குமாரின் இரண்டாவது திருமணவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு பங்கஜ் குமார் சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கு தனது குடும்பத்தாருடன் வந்த பங்கஜின் முதல் மனைவி மஞ்சு மணமேடையில் இருந்த பங்கஜ்குமாரை இழுத்துபோட்டு அடி வெளுத்து வாங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து திருமணத்திற்கு வந்த அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.பின்னர் மஞ்சுவின் குடும்பத்தினர் பங்கஜ்குமாரை அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  


Advertisement