"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டும் அனுமதி.! முதலமைச்சர் உத்தரவு.!
இந்தமாதம் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரும் நிலையில், தீபாவளி என்றாலே நாம் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது பட்டாசு தான். பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்பட்டு, அதன் மூலம் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக கூறி பல மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்து வருகின்றன.
அந்தவகையில் அரியானா மாநில அரசும், பட்டாசு விற்பனைக்கு கடந்த 6-ந்தேதி முழு தடை விதித்தது. இந்தநிலையில், தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிப்பதாக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். காற்று மாசுபாட்டை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காற்று மாசுபாடு மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.