
கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்.!
கிரிப்டோ கரன்சி தொடர்பான மசோதா, அமைச்சரவை ஒப்புதல் பெற்று நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் சுஷில்குமார் மோடி கேள்வி நேரத்தின்போது, கிரிப்டோ கரன்சி தொடர்பாக தவறான விளம்பரங்கள் வெளியாகின்றன. தற்காலிகமாக இதுபோன்ற விளம்பரங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர், மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த பிறகு புதிய மசோதா தாக்கல் செய்யப்படும். கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையானது மிகவும் சிக்கல் நிறைந்தது. ஆனால் அதற்கு இதுவரையில் எவ்வித கட்டுப்பாட்டு வரையறையும் விதிக்கப்படவில்லை. அது எந்த வரையறைக்குள்ளும் வரவில்லை. மேலும், விளம்பரங்களுக்கு தடை விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறினார்.
இந்தியாவில் கிரிப்டோ கரன்சியை அங்கீகரிப்பதும், தடை செய்வதும் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையியல் பெரிய மாற்றம் ஏற்படும். ஏனெனில், இந்தியாவில் பலர் பல லட்சம் கோடிகளில் இதில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement