இந்தியா

அண்ணன் போலீஸ்! தங்கை மாவோயிஸ்ட்! இருவருக்கிடையே நடந்த துப்பாக்கிச் சண்டை!

Summary:

fight with police brother and mavoyist sister

சத்திஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுடன் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது காவலர் வெட்டி ராமா என்பவருக்கு எதிராக அவரது தங்கை வெட்டி கன்னி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.  
 
ஆரம்பத்தில் இருவருமே மாவோயிஸ்ட்டுகளாக சத்திஸ்கரில் இருந்துள்ளனர். பின்னர் தன் மனதில் ஏற்பட்ட மாற்றத்தால் வெட்டி ராமா அதிலிருந்து வெளியேறி காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

மேலும், மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து பிரிந்து வருமாறு வெட்டி கன்னிக்கு பலமுறை வெட்டி ராமா கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் அவரது பேச்சைக் கேட்காமல் வெட்டி கன்னி தொடர்ந்து மாவோயிஸ்ட்டாகவே போராடி வந்துள்ளார்.

இந்நிலையில் வெட்டி ராமா தனது தங்கைக்கு எதிராக சண்டையிடும் சூழல் ஏற்பட்டது. இந்த சண்டையில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட நிலையில், வெட்டி ராமாவின் தங்கை துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பியுள்ளார்.


Advertisement