இந்தியா வீடியோ

ரயில் தண்டவாளத்தில் சிக்கிய மகள்! சூப்பர் ஹீரோவாக மாறி தந்தை செய்த அசத்தல் காரியம்! வைரலாகும் திக் திக் வீடியோ!

Summary:

father save mother from train track

ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த தனது மகளை சற்றும் யோசிக்காமல் மிக சாமர்த்தியமாக தந்தை காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பார்ப்போருக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தின் இஸ்மாயிலியா நகரின் ரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சி வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் 50 வயது மதிக்கத்தக்க 
தந்தை ஒருவர் தனது 13 வயது மகளுடன் ரயில் தண்டவாளத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது தண்டவாளத்தில் திடீரென ரயில் ஒன்று வந்துகொண்டு இருந்துள்ளது. அந்த ரயில் திடீரென பெரும்ஒலி எழுப்பியதும் அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி நிலைதடுமாறி அப்படியே அருகிலிருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளார். மேலும் ரயில் வேகமாக வந்துகொண்டிருந்ததால் அங்கிருந்த அனைவரும் அவரது தந்தையை நகருமாறு கத்தியுள்ளனர்.

ஆனால் அதனை பொருட்படுத்தாத சிறுமியின் தந்தை சற்றும் யோசிக்காமல் தண்டவாளத்தின் உள்ளே குதித்து, தனது மகளை இறுக கட்டியணைத்து அப்படியே படுத்துள்ளார். பின்னர் ரயில் நகர்ந்ததும் தனது மகளை அப்படியே தூக்கி கொண்டு எழுந்துள்ளார். இவை அனைத்தையும் அஹ்மத் அகீஃப் என்ற மாணவர் வீடியோ எடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்டதும் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement