இந்தியா காதல் – உறவுகள்

ஆட்டோவில் ஏறியவரின் பையில் வந்த துர்நாற்றம்! திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வெளியான பகீர் சம்பவம்!

Summary:

father killed daughter for love

தானே மாவட்டம், டிட்வாலா இந்திரா நகரில் வசித்து வருபவர் அரவிந்த் திவாரி.  47 வயது நிறைந்த இவர் அந்தேரியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவரது மூத்த மகள் பிரின்சி. 22 வயது நிறைந்த அவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில் பிரின்சி வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நிலையில் அரவிந்த் கடுமையான கோபம் அடைந்துள்ளார். மேலும் மகளிடம் அவரது காதலை விட்டுவிடுமாறு கூறி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் பிரின்சி தந்தையின் பெயரை பேச்சை கேட்காத நிலையில் ஆத்திரமடைந்த அரவிந்த் மகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி பைகளில் அடைத்துள்ளார்.

 அதனை தொடர்ந்து உடலை வெவ்வேறு இடங்களில் வீச முடிவு செய்த அவர்  கல்யாண் ரயில் நிலையத்திலிருந்து தீவண்டி செல்ல முயற்சி செய்துள்ளார். அப்பொழுது ஆட்டோ ஒன்றில் ஏறி அவர் கோவா நாக்கா என்ற பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பையில் இருந்து தூர்நாற்றம் வீசியதை உணர்ந்த ஆட்டோடிரைவர் அது குறித்து விசாரித்துள்ளார்.இதனால் பதற்றம் அடைந்த அவர் வண்டியை விட்டு இறங்கி ரோட்டில் பையை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.  

இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவர் இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளித்த நிலையில்,  போலீசார் அங்கு விரைந்து பையை திறந்து பார்த்தனர். அதில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் இருப்பதை கண்ட அவர்கள் அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து,  கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அரவிந்த் திவாரியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 


Advertisement