வேண்டாப்பா..! கெஞ்சிய சிறுவன்..! தலைகீழாக தொங்கவிட்டு இரக்கிமின்றி தாக்கிய தந்தை..! வீடியோ வைரலானதால் கைது.!

வேண்டாப்பா..! கெஞ்சிய சிறுவன்..! தலைகீழாக தொங்கவிட்டு இரக்கிமின்றி தாக்கிய தந்தை..! வீடியோ வைரலானதால் கைது.!


Father beat son viral incident in Agra

பெத்த பிள்ளையை கயிற்றில் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு அடித்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

52 விநாடிகள் கொண்ட ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.  வீடியோவில் நபர் ஒருவர் சிறுவன் ஒருவரை கயிற்றில் கட்டி, தலைகீழாக தொங்கவிட்டு மக்கள் முன்னிலையில் தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தன்னை அடிக்கவேண்டாம் என அந்த சிறுவன் கெஞ்சுவதும், சிறுவன் தாக்கப்படுவதை பார்த்து அதிர்ச்சியடையும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது. வீடியோவை பார்த்த பலரும் அந்த நபர் கைதுசெய்யப்படவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், ஆக்ராவை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்தனர். ஆக்ராவை சேர்ந்த அந்த நபர் தனது மனைவியுடன் சண்டையிட்ட நிலையில் தனது மூன்று பிள்ளைகளில் ஒருவரான தனது முதல் மகனை கயிற்றில் கட்டி, தலைகீழாக தொங்கவிட்டு அடித்தது தெரியவந்தது.

ஆனால் அந்த நபர் இதுவரை தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை எனவும், இதுவரை அந்த நபர் குடிபோதையில் இருந்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.