அடுத்தகட்டத்துக்கு செல்லும் விவசாயிகள் போராட்டம்.! நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்.!

அடுத்தகட்டத்துக்கு செல்லும் விவசாயிகள் போராட்டம்.! நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்.!


farmers-protest

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு, எந்த தீர்வும் கிடைக்கவில்லை. 

இந்தநிலையில், இன்று 18.02.2021 பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால்  நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

farmers

இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளில் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு காரணமாக பல்வேறு இடங்களில் இன்று  சில ரயில்கள் முழுமையாகவும், பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.