இந்தியா

சாதாரண நிலையிலிருந்து கோடிக்கணக்கில் குவிக்கும் விவசாயி! வெளியான வியப்பூட்டும் அதிசயம்!

Summary:

Farmar man earn crores from potato

குஜராத் மாநிலத்தில் வசித்து வருபவர் ஜித்தேஷ் படேல். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். ஜித்தேஷ்  குடும்பத்தில் யாரும் பெரியளவில் படித்ததில்லை. ஆனால் ஜித்தேஷ்  வேளாண் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார் . அதனைத் தொடர்ந்து அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார். 

 இந்நிலையில் இனப்பெருக்கம், நோயியல்,  பூச்சிகளை அளித்தல் போன்றவற்றிற்கு அவரது வேளான் படிப்பு பெரும் உதவியாக உள்ளது. மேலும் அவரது வருமானமும் பெருமளவில் உயர துவங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது லேடி ரொசட்டா என்ற உருளைக்கிழங்கு ரகத்தை ஆயிரம் ஏக்கரில் ஜித்தேஷ் பயிரிட்டுள்ளார்.

மேலும் இவை சிப்ஸ், பிஸ்கட் போன்றவை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுவதால் நாட்டில் உள்ள பல நிறுவனங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் கடந்த  ஆண்டு மட்டும்  25 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாக ஜித்தேஷ் கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு ஜித்தேஷ் ஒரு லட்சம் டன் லேடி ரொசட்டா உருளைக்கிழங்கை சவுதி அரேபியா,  இந்தோனேசியா, ஓமன், குவைத் போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்


Advertisement