பிரபல பாடகரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கொண்டாடிய கொலையாளிகள்.! சிக்கிய வீடியோ

பிரபல பாடகரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கொண்டாடிய கொலையாளிகள்.! சிக்கிய வீடியோ


Famous Singer murder

பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் பிரமுகரான சித்து மூஸ்வாலா சில நாட்களுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டார். 2022ஆம் ஆண்டில் நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் பாடகர் சித்து மூசேவாலா இணைந்தார். அவர் கடந்த மே 29ஆம் தேதி பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியத இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் போலீசார் சிலரை கைது செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை சோதனை செய்ததில், சித்து மூஸ்வாலாவை சுட்டு கொன்று விட்டு காரில் செல்லும் போது துப்பாக்கிகளை காட்டி கொலையாளிகள் கொண்டாடிய வீடியோ இருந்துள்ளது.