இந்தியா

பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடந்த 4 பேர்! சிக்கிய கடிதத்தால் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்!

Summary:

family members commits suicide for money issue

ஐதராபாத் ஹஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் 36 வயது நிறைந்த அவர்  சாப்ட்வேர் என்ஜினீயரான வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுவாதி. இவர்க்ளுக்கு 6 வயது மற்றும் 1½ வயதில் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பிரதீப்குமார் சொந்தமாக நிறுவனம் ஒன்றை  தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்காக பிரதீப்குமார்  சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஆனால் நிறுவனம் தொடங்கும் அவரது முயற்சி தோல்வியடைந்துள்ளது. 

இதனால் அவர் வாங்கிய ரூ.22 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெருமளவில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் நாளுக்குநாள் அவர் மனவேதனை அடைந்து வந்துள்ளார். இந்நிலையில்  குடும்பத்தோடு இறந்துபோக முடிவு செய்து சமீபத்தில்  மனைவி மற்றும் 2 மகன்களுக்கும் வி‌ஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தானும் வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் சுவாதியின் பெற்றோர் தொடர்ந்து போன் செய்துகொண்டு இருந்துள்ளார். ஆனால் யாருமே போனை எடுக்காததால் சந்தேம் அடைந்த அவர்கள் வீட்டுக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு வீட்டுக்குள் 4 பேரும் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

மேலும் அங்கு கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில் நான் சொந்தமாக நிறுவனம் தொடங்க ஆசைப்பட்டு, அதிகமாக கடன் வாங்கிவிட்டேன். அதை அடைக்க முடியாததால் இந்த முடிவை எடுக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என பிரதீப்குமார் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement