29 வயதில் ஆன்மீக குருவாக நடித்து செய்த அட்டூழியம்! வீட்டில் 24 இளம் பெண்களுக்கு பால் கொடுத்து பலாத்காரம்..... செல்போனில் ஆபாச வீடியோக்களின் பகீர் பின்னணி!!!



fake-spiritual-guru-abhishek-mishra-arrested-mathura

மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்திய போலிச்சாமியார் விவகாரத்துக்கு அடுத்ததாக, உத்தரப் பிரதேசத்தின் மதுராவிலும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆன்மீக குருவாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக சுரண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 29 வயதான அபிஷேக் மிஸ்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐஐடி பட்டதாரியிலிருந்து ஆன்மீக குரு வரை

தகவலின்படி, அபிஷேக் மிஸ்ரா ஐஐடி ரூர்க்கியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். பின்னர் தன்னை மக்கள் எளிதில் நம்பும் வகையில் ‘அதீகர்தா நாராயண தாஸ்’ என பெயரை மாற்றிக் கொண்டு ஆன்மீக போதகராக செயல்பட்டு வந்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆன்மீக கருத்துகள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு பலரின் நம்பிக்கையைப் பெற்றதாக கூறப்படுகிறது.

பெண்களை தனிமைப்படுத்தி சுரண்டியதாக குற்றச்சாட்டு

விசாரணையில், தனது தொடர்புக்கு வந்த பெண்களை குடும்பத்தினரிடமிருந்து பிரியும்படி மனரீதியாக பாதித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மதுராவில் உள்ள அவரது வீட்டில் 24 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. தனது கட்டுப்பாட்டில் இருந்த பெண்களிடம் கந்தர்வ திருமணம் செய்து கொள்வதாக கூறி, பிரசாதமாக வழங்கிய பாலில் போதைப்பொருள் கலந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!

மொபைலில் ஆபாச வீடியோக்கள் பறிமுதல்

அதன்பின், பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரகசியமாக பதிவு செய்து மிரட்டலுக்கும் பயன்படுத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மொபைல் போனில் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், பெண்களின் குடும்பத்தினரிடமிருந்து கணிசமான தொகை பணமும் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகனின் நடவடிக்கைகள் குறித்து அறிந்த பின்னர் அவரது தாயாரே வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அபிஷேக் மிஸ்ராவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனரா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இருமல் மருந்துன்னு சொல்லி அம்மா ஏதோ கொடுத்தாங்க..! இறப்பதற்கு முன் தங்கைகளை காப்பாற்ற துடித்த அக்காவின் பகீர் வாக்குமூலம்... இறுதியில் பரிதாபமாக இறந்த பச்சிளம் குழந்தைகள்..!!!