இந்தியா வீடியோ

பேய் நடமாட்டமா? நள்ளிரவில் தானாக இயங்கிய உடற்பயிற்சி கருவி! வைரலான திகில் வீடியோவின் பின்னணி இதுதானா!

Summary:

Exercise machine work automatically in park

உத்திரப்  பிரதேசம் மாநிலம், ஜான்சி நகரில் உள்ள பூங்கா ஒன்றில் தோள் 
பட்டைகளை உறுதியாக்கும் உடற்பயிற்சி கருவி ஒன்று சமீபத்தில் நள்ளிரவில்  ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், தனியாக இயங்கிக்கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் அதனை கண்ட அப்பகுதி மக்கள் பூங்காவில் பேய் நடமாட்டம் இருப்பதாக அஞ்ச துவங்கினர். 

 மேலும் இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பின்னர்  இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்த நிலையில் அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து உடற்பயிற்சி கருவியை ஆராய்ந்துள்ளனர். 

அப்பொழுது கருவியின் அசையும் பகுதியில் யாரோ லூபிரிக்கண்ட எனப்படும் எண்ணெயை அதிகளவு ஊற்றியிருப்பதும், அதனாலேயே கருவி தானாக இயங்குகிறது எனவும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறுசலசலப்பை  ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement