கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்குப்போட்டு தற்கொலை.! என்ன காரணம்.?

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்குப்போட்டு தற்கொலை.! என்ன காரணம்.?


Eduyurappas granddaughters suicide

பா.ஜ.கவின் மூத்த தலைவர் மற்றும் கர்நாடக முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பாவிற்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற மகன்களும், அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி என்ற மகள்களும் உள்ளனர்.

இவர்களில் பத்மாவதியின் மகள் சவுந்தர்யா. இவரது கணவர் நீரஜ் ஆவார். சவுந்தர்யாவும், நீரஜும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நீரஜ் மருத்துவமனைக்கு வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அப்போது தனது 9 மாத குழந்தையுடன் சவுந்தர்யா வீட்டில் இருந்துள்ளார்.

பின்னர் குழந்தையை வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு, மற்றொரு அறைக்கு சென்று சவுந்தர்யா உட்புறமாக கதவை பூட்டி கொண்டார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. கதவை நீண்ட நேரமாக தட்டியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனையடுத்து நீரஜுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்த நீரஜ், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சவுந்தர்யா மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக சவுந்தர்யாவை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சவுந்தர்யா தற்கொலை செய்வதற்கு முன்பாக எந்த ஒரு கடிதமும் எழுதி வைக்கவில்லை என்பது தெரியவந்தது. வீட்டில் இருக்கும்போது தனது 9 மாத கைக்குழந்தையை, வீட்டு வேலைக்கார மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு, சவுந்தர்யா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.