ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய முயற்சி!..எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணை வெளில் வீசிய குடிபோதை ஆசாமி!.. நள்ளிரவில் பயங்கரம்..!
ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய முயற்சி!..எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணை வெளில் வீசிய குடிபோதை ஆசாமி!.. நள்ளிரவில் பயங்கரம்..!

அரியானா மாநிலம், பதிஹாபாத் மாவட்டம் தொஹனா பகுதியை சேர்ந்தவர் மன்தீப் கவுர் (30). இவரது கணவர் ஹர்ஜிந்தர் சிங். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு தனது 9 வயது மகனுடன் ரொக்டக் நகரில் இருந்து தொஹனா நோக்கி மன்தீப் கவுர் பயணிகள் ரயிலில் பயணித்தார். அவர் பயணித்த பெட்டியில் மதுபோதையில் சந்தீப் என்ற நபர் ஏறியுள்ளார்.
இரவு நேரம் என்பதாலும், ரயில் பெட்டியில் மன்தீப் கவுர், அவரது மகன் உட்பட மூவர் மட்டுமே இருந்ததையும் சாதகமாக பயன்படுத்திகொண்ட சந்தீப், மன்தீப் கவுரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு மன்தீப் கவுர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சந்தீப் ஓடும் ரயிலில் இருந்து மன்தீப் கவுரை வெளியே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் சந்தீப்பும் ஓடும் ரெயில் இருந்து கீழே குதித்துள்ளார்.
ரயில் தொஹனா ரயில் நிலையத்திற்கு வந்தடைய, அங்கு காத்திருந்த மன்தீப் கவுரின் கணவர் ஹர்ஜிந்தர் சிங் தனது மகன் மட்டும் அழுதுகொண்டு ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்குவதை கண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹர்ஜிந்தர் அம்மா எங்கே என்று மகனிடம் கேட்டுள்ளார். அப்போது, நடந்த சம்பவத்தை தந்தையிடம் அந்த சிறுவன் கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த ஹர்ஜிந்தர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததுடன் ரயில்வே தண்டவாளத்தில் தனது மனைவியை தேடினார். அங்கு தனது மனைவி மன்தீப் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து சற்று தொலைவில் சந்தீப் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து ஓடும் ரெயில் இருந்து கீழே தள்ளியை நபரை கைது செய்தனர்.