சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல், அழுது அடம்பிடித்த 11 மாத குழந்தை.! தாய் செய்த செயலால் வியப்பில் மூழ்கிய மருத்துவர்கள்!!

சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல், அழுது அடம்பிடித்த 11 மாத குழந்தை.! தாய் செய்த செயலால் வியப்பில் மூழ்கிய மருத்துவர்கள்!!


doctors-treat-baby-girls-doll-before-her

டெல்லியில் அமைந்துள்ள லோக்நாக் என்ற மருத்துவமனையில், 11 மாத பெண் குழந்தை ஒன்று கால்முறிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.மேலும் அப்பொழுது காலில் கட்டுபோட்டு அதனை சற்றும் அசைக்காமல் செங்குத்தாக வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் குழந்தை கடுமையான வலியால் துடித்து அழுதுகொண்டு இருந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் சிகிச்சை கொடுப்பதற்கு  கடும் சிரமம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அவரது தாயார் ஆச்சரியம் மிகுந்த யோசனை ஒன்றை அளித்துள்ளார். 

treatment

அதாவது அந்த குழந்தைக்கு மிகவும் பிடித்த பொம்மை ஒன்றை மருத்துவமனைக்கு கொண்டுவந்து அதன் காலிலும் கட்டுபோட்டு செங்குத்தாக தொங்கவிட்டுள்ளனர்.

அதனை கண்ட குழந்தையும் தனது கால்களுக்கு கட்டுப்போடுவதற்கு தானே கொடுத்துள்ளது. பின்னர் சிகிச்சைக்கு பிறகு சிறிதுநேரத்தில் உறங்கவும் செய்துள்ளது. இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

treatment