இந்தியா

பிறந்த பிஞ்சு குழந்தையை 1.5 கி.மீ பைக்கில் கொண்டு சென்று உயிரை காப்பாற்றிய மருத்துவர்.! நெகிழ்ச்சி சம்பவம்.!

Summary:

Doctor saved new born baby by admitting hospital at correct time

மஹாராஷ்டிராவில் பிறந்த பிஞ்சு குழந்தையை மருத்துவர் ஒருவர் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் தூக்கி சென்று உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், அலிபாபா பகுதியில் குடியிருந்தவர் ஸ்வேதா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவவலி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக போக்குவரத்துக்கு வசதி இல்லாததால் ஸ்வேதாவின் கணவர் மனைவியை அருகில் இருந்த நர்சிங் ஹோம் ஒன்றில் அனுமதித்துள்ளார்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பிறந்த குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததை அடுத்து குழுநதைக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த நர்சிங் ஹோமில் போதுமான வசதி இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவர் குழம்பிபோயுள்ளார்.

உடனே தன்னிடம் இருந்த இருசக்கர வாகனம் மூலம் குழந்தையின் தந்தை உதவியுடன் பிறந்த குழந்தையை இருசக்கர வாகனத்தில் தூக்கிக்கொண்டு சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மருத்துவமனை ஒன்றுக்கு கூட்டிச்சென்று அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார். அங்கு குழந்தை சுமார் 12 மணிநேரம் கண்காணிப்பில் இருந்தபிறகு குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரழிவு நோயாளியான ஸ்வேதாவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இறந்துவிட்ட நிலையில், இந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டதாகவும், குழந்தை நலமுடன் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.


Advertisement