இந்தியா

தற்கொலை செய்து சடலமாக கிடந்த 11 பேர்! மர்மங்கள் நிறைந்த வீட்டில் குடியேறும் மருத்துவர்! கூறிய அதிர்ச்சி காரணம்!

Summary:

doctor gong to house for 11 people suicide

2018 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி டெல்லியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் நாராயணி தேவி(75), நாரயணி தேவியின் மகள் பிரதீபா (57), அவரது மகள் பிரியங்கா (33),  நாரயணி தேவியின் மகன் புவனேஷ் (50) அவரது மனைவி சவிதா மற்றும் லலித்(45) அவரது மனைவி டீனா (42) அவர்களது பிள்ளைகள் நிதி(25), மேனகா (23), துருவ் (15) மற்றும் சிவம்(15) ஆகியோர் தூக்குபோட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த மர்ம மரணம் குறித்து தற்போது வரை தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவர்கள் சடலமாக கிடந்த வீட்டிற்குள் பேய் இருப்பதாக தகவல்கள் பரவிவந்தது. மேலும் இந்த வீட்டிற்கு வாடகைக்கு குடியேற வருவர்களும் ஒரு வாரத்தில் வீட்டைவிட்டு வெளியேறி விடுவர். மேலும் கடைகளுக்கும் வாடகைக்கு விட முடியவில்லை. 

இந்நிலையில் மோகன் என்ற மருத்துவர் இந்த வீட்டில் குடியேற குடும்பத்துடன் பார்த்துவிட்டு சென்றுள்ளார். மேலும் டிசம்பர் 30ஆம் தேதி இந்த வீட்டில் குடியேறவுள்ளனர். இந்நிலையில் இது அக்கபக்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து பேசிய மருத்துவர் மோகன், எனக்கு பேய்கள் மீது நம்பிக்கையே கிடையாது.மேலும் இவ்வளவு பெரிய வீடு 25,000 வாடகைக்கு கிடைத்துள்ளது. அதுவே மகிழ்ச்சியாக உள்ளது. எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.


 


Advertisement